திங்கள், 16 ஆகஸ்ட், 2010

அப்துல்கலாம் குறிப்பிட்டதை போல நம்முடைய கடமைகளை தவறாமல் செய்வதை விட்டு விட்டு மற்றவரின் மீது குறை சொல்வதை முதலில் விட்டு ஒழிக்க வேண்டும்.
எத்தனையோ சட்டங்கள் மதித்து கடைபிடிக்க வேண்டும் என்றாலும், முதன் முதலாக நாம் சாலை விதிகளை எடுத்து கொள்வோம்.
சாலை விதிகளை மதித்து அதனை சரியாக கடைபிட்டிக்கிரோமா என்று எண்ணிப்பாருங்கள். காவலர் இல்லாவிடில் நாம் ஒரு வழி சாலையில் பயணிக்க எத்தனிக்கிரோமா இல்லையா? ஏன் இந்த குறைபாடு நம்மிடையே உள்ளது? நமக்கு யாராவது ஒருவர் காவல் தேவைப்படுகிறது. ஏன் இந்த நிலை? நாம் கல்வி கற்றது எதற்காக? நம்மை நாமே மேம்படுத்தி கொள்வதற்காக தானே? அதனை விடுத்து சட்டத்தை அறியாதவர் போல் பாசாங்கு எதற்கு? சட்டமீறல் எதற்கு? நாம் குற்றம் செய்து பிடிபடும்போது காவலர் முதலில் கேட்கும் கேள்வி என்ன? படித்தவர் போல் தெரிகிறீர்கள் ஏன் இந்த தவறை செய்கிறீர்கள்? கூனி குறுகும் கேள்வி கேட்கும் போது அவமானமாக இல்லையா?
அடுத்தவர்கள் தவறு செய்வதை சுட்டி காட்டுவதை விடுத்து நம்மை நாமே சரி செய்ய முனைந்தால் குற்றங்கள் குறைவது உறுதி. விபத்துக்கள் குறைவது நிச்சயம்.
மற்றவரை பற்றி கவலை படாதீர்கள் உங்களை சரி செய்து கொள்ளுங்கள்.
இன்று முதல் சபதம் செய்வோம்... சாலை விதிகளை மதிப்போம். சரியாக கடை பிடிப்போம். முதலில் மிகவும் கடினமாக இருக்கும். நம்மை விட எல்லோரும் முன்னே செல்வர். இருக்கட்டுமே? எத்தனை மணித்துளிகள் நம்மை விட முன்னே சென்று விடுவர்? ஐந்து அல்லது ஆறு மணித்துளிகளே அதிகம். பொறுமையாக செயல்பட்டு கடைபிடியுங்கள். நிச்சயம் பலன் உண்டு.
இந்த இடுகையை படித்தவர்கள் தங்கள் நண்பர்களிடமும் பரப்புங்கள். முயற்சி செய்து பார்ப்போமே!
வேலுமணி - என். டி. சி, கோவை.